Latest

பண்டார் பாரு செந்துலில் சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி பலி; சாட்சிகளை தேடும் போலிஸ்

செந்துல்,ஜன 14 -கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள பண்டார் பாரு செந்துல், ஜாலான் 1/48A பகுதியில் சாலை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர், கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் போலீஸ் விசாரணைக்கு உதவுமாறு கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவர், ஏசிபி முகமட் சம்சூரி முகமட் ஈசா கேட்டுக் கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9.15 மணியளவில் நடந்த
“இந்த விபத்தில், 42 வயதுடைய உள்ளூர் ஆண் ஒருவர் ஓட்டிய ஹோண்டா ஒடிசி வகை பல்நோக்கு வாகனத்தை செலுத்தி வந்த போது 85 வயதுடைய உள்ளூர் மூதாட்டி ஒருவரை மோதியதாகவும் தொடக்ககட்ட விசாரணையில், கடை வரிசைப் பகுதியிலிருந்து வாகனத்தை வெளியே கொண்டு வந்து வலதுபுறம் திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் சரியான நேரத்தில் தவிர்க்க முடியாமல், நடந்து சென்ற மூதாட்டியை மோதினார்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த மோதலின் காரணமாக, மூதாட்டி தலையில் கடுமையான காயம் அடைந்தார். கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

“இந்த வழக்கு, 1987ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும்
இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், விசாரணைக்கு உதவுமாறு 03-2071 9999 என்ற எண்ணில் துன் எச்.எஸ். லீ போக்குவரத்து காவல் நிலையத்தையோ அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்தையோ தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன், சமூக ஊடகங்களில் பரவிய டாஷ்கேம் (dashcam) காணொளியில், ஒரு வாகனம் நடைபயணியை மோதும் விபத்து காட்சிகள் பதிவாகி வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!