
வங்காளதேசம்,அக்டோபர் -15
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் துணி தயாரிப்பு ஆலை மற்றும் ரசாயனக் கிடங்கு ஒன்று முழுமையாக எரிந்துவிட்டன என்றும் மேலும் பலர் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் 12 பேரின் உடல்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தேசிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன என்று டாக்கா தீயணைப்பு சேவை துறை அறிவித்துள்ளது.
ஏழு மாடி கொண்ட துணி ஆலைக்குக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியிலிருந்து தீ பரவியதாகவும், பெரும்பகுதி தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அருகிலுள்ள ரசாயனக் கிடங்கில் இன்னும் தீ பரவி கொண்டிருப்பதாகவும், அதில் பிளாஸ்டிக், ஹைட்ரஜன் பெராக்சைடு (hidrogen peroksida) போன்ற ஆபத்தான பொருட்கள் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போராடி வருகின்றனர் என்று அறியப்படுகின்றது.