
உலு கிள்ளான், ஜனவரி-16-சிலாங்கூர், உலு கிள்ளான், தாமான் ஹில் வியூவில் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பாதுகாப்புக் பெட்டகம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மூவருக்குப் போலீஸ் வலைவீசியுள்ளது.
டிசம்பர் 26-ஆம் தேதி அன்று, வீட்டின் சமையலறை கதவு உடைக்கப்பட்டு, 100 கிலோ எடையுள்ள அப்பெட்டகம் திருடுபோனது.
3 சந்தேக நபர்கள் அப்பெட்டியைத் தூக்கிச் செல்லும் 38 வினாடிகள் கொண்ட CCTV காட்சி வைரலானது.
இதையடுத்து தொடக்கத்தில் 1 பெண் உட்பட 6 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
எனினும், அவர்களுக்கும் அக்கொள்ளைக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் உறுதியானதால் அனைவரும் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
தற்போது CCTV உதவியுடன் சந்தேக நபர்கள் தீவிரமாகத் தேடப்படுகின்றனர்.



