
ஷா ஆலாம், நவம்பர்-17, சிலாங்கூர், கோத்தா கெமுனிங்கில் குடிபோதையில் இயற்கைக்கு மாறாக ஒரு பூனையை பாலியல் வல்லுறவு செய்து, அதை நான்காவது மாடியிலிருந்து தூக்கி எறிந்ததாகக் கூறப்படும் ஆடவனைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
அந்த கொடூரத்தை நேரில் கண்ட அடுக்குமாடி குடியிருப்பாளர் ஒருவர், நான்காவது மாடிக்குச் சென்று அவனைத் திட்ட, பயத்தில் பூனையை அவன் கீழே வீசினான்.
அச்சம்பவத்தை அக்குடியிருப்பாளர் கைப்பேசியில் பதிவுச் செய்து போலீஸுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, 33 வயது அந்த நேப்பாளி கைதானான்.
அங்கு பாதுகாவலராக அவன் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
அவன் தூக்கி வீசிய பூனைக்கு என்ன ஆனது என்பது குறித்து தகவல் இல்லை.
இந்த சம்பவம் 2015 விலங்கு நலச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் RM100,000 அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளை பாதுகாக்கும் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.



