Latestஉலகம்

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வீடியோ எடிட்டிங் கருவிகள்; அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா

அமெரிக்கா, நவம்பர் 17 – இன்ஸ்டாகிராம் அல்லது முகநூலில் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவான வீடியோக்களை உருவாக்க அல்லது எடிட்டிங் செய்வதற்கு தகுந்த, AI – செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட இரு அம்சங்களை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் முதல் அம்சம் ஈமு வீடியோ என அழைக்கப்படுகிறது.

ஈமு வீடியோவை கொண்டு, நான்கு வினாடி வீடியோவை, தலைப்பு, புகைப்படம் ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்க அல்லது எடிட்டிங் செய்ய முடியும்.

மற்றொன்று ஈமு எடிட் என அழைக்கப்படுகிறது.

அது பயனர்கள் எளிதாக வீடியோக்களை மாற்ற அல்லது திருத்த வகை செய்கிறது.

அதன் வாயிலாக, அசல் காட்சிகள் அல்லது புகைப்படங்களை பயனர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும்.

உலகளாவிய நிலையில், பயன்பாட்டில் அதி வேகமான முன்னேற்றத்தை பதிவுச் செய்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உட்படுத்தி இருக்கும் மெட்டாவின் அந்த புதிய அம்சங்கள் சமூக ஊடக பயனர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!