
கோலாலம்பூர், அக்டோபர்-29, 2025-ல் ஆசியான் உச்சநிலை மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தும் போது, ஆசியான் தலைவர்களின் அதிகாரத்துவ வாகனங்களாக EV எனப்படும் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கு ஏதுவாக, முடிந்த வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு EV வாகனங்கள் பெறப்படும் என்றார் அவர்.
நடப்பில், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பெரிய மெர்சிடிஸ் கார்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் நீடித்த இயற்கைத் தோழமை மற்றும் ஆற்றல் மாற்றத்தில் மலேசியா தீவிரமாக இருப்பதை புலப்படுத்தும் விதமாக, இந்த மின்சார வாகனப் பயன்பாடு உயர்மட்ட அளவிலும் அமுலுக்கு வருவதாக பிரதமர் சொன்னார்.