
மூவார், ஜனவரி-15 – ஜோகூர் செகாமாட்டில் 2 சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதன் பேரில் இந்தியப் பிரஜை மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
எனினும் மலாய் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரியாததால், Shaikh Faroouqe Nabisaheb எனும் 59 வயது அவ்வாடவரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
முதல் குற்றச்சாட்டின் படி, ஜனவரி 4-ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு அங்குள்ள பள்ளிவாசலொன்றில் 10 வயது சிறுமியிடம் அவர் பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளார்.
அதே நாள் அதே நேரம் அதே இடத்தில் 12 வயது சிறுமியிடமும் தகாத வகையில் நடந்துகொண்டாதாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும், இன்னோர் ஆண் நண்ருடன் விளையாட்டுப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிப்பதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றதாகவும் தெரிகிறது.
அப்போது இருவரையும் நெருங்கிய அவ்வாடவர் அவர்களிடம் 1 ரிங்கிட் நோட்டை நீட்டி, இருவரையும் உடல் ரீதியாக தொட்டுள்ளார்.
எனினும் அவரின் அச்செயலை அச்சிறுமிகளின் தோழன் பார்த்து விட்டான்; இதையடுத்து நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியிருக்கின்றனர்.
அதே நாளில் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ய, அவ்வாடவர் கைதானார்.
இந்நிலையில், மொழிப்பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு பிப்ரவரி 10-ஆம் தேதி வழக்கு
மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.