Latestஇந்தியா

தண்ணீர் குடிக்கும்போது தவறுதலாக தேனீயை விழுங்கிய விவசாயி உயிரிழந்தார்

போபால், டிச 9 – இந்தியாவில் போபாலில் பெராசியா என்ற கிராமத்தில் 22 வயதான விவசாயி ஒருவர் புதன்கிழமை இரவு தண்ணீர் குடிக்கும்போது தவறுதலாக தேனீயை விழுங்கிதால் உயிரிழந்த விநோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேனீ அவரது நாக்கிலும் உணவுக் குழாயிலும் கொட்டியதால் மூச்சு விடுவதில் சிரமத்திற்கு உள்ளானதால் அந்த விவசாயி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டது . இதன் தொடர்பில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருதுகின்றனர்.

இறந்த 22 வயதுடய ஹிரேந்திர சிங் போபாலிலுள்ள பெராசியாவின் மன்பூரா சக் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயக் கூலி வேலை செய்தவர் என்று போலீசார் தெரிவித்தனர். இரவு 9 மணியளவில் ஹிரேந்திரா இரவு உணவு உட்கொண்டபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அவரது சகோதரர் மல்கான் சிங் தெரிவித்தார். அப்போது இருளாக இருந்ததால் தண்ணீரில் தேனீ இருந்ததை அவர் கவனிக்கவில்லை. நீரை உறிஞ்சும்போது தேனீ உயிருடன் இருந்ததாகவும் . இதனை தொடர்ந்து ஹிரேந்திரா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் மருத்துவமனையில் அவர் வாந்தி எடுத்தபோது அந்த தேனீ வெளியே வந்ததாக மல்கான் சிங் கூறினார். ஹிரேந்திராவை தேனீ கொட்டியபோது அதிலிருந்து வெளியான விஷத்தை விழுங்கியதால் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!