Latestமலேசியா

சிம்பாங் பூலாய் R&R பகுதியில் ஒலிபெருக்கி மூலம் விசித்திர அறிவிப்பு; வைரல் வீடியோவால் பரபரப்பு

ஈப்போ, ஜூன்-9-சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், சிம்பாங் பூலாய் R&R பகுதியில் ஒருவர் ஒலிபெருக்கி மூலம் விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த நபர், “தலைவர்களும் அரசாங்கமும் போருக்குச் செல்லுமாறு மிரட்டப்பட்டுள்ளனர். போர் செய்யாவிட்டால் போலீசும் நோய்களும் வரும்” என்று கூறியது காணொளியில் பதிவாகியுள்ளது.

அவரது அறிவிப்பு சமூக ஊடகப் பயனர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அப்போது ஒருவர் “அண்ணா, என்ன பிரச்சினை?” என்று கேட்டபோதும், அவர் அதை கவனிக்காமல் தனது அறிவிப்பைத் தொடர்ந்து வெளியிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!