
குவாலா நெரூஸ், ஜனவரி-22,பகுதி நேர வேலை செய்ய விரும்பும் ஆசிரியர்கள், அதற்கு முதலில் கல்வி அமைச்சிடம் அனுமதி வாங்க வேண்டும்.
அது தொடர்பான தெளிவான வழிகாட்டி ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
எந்த பகுதி நேர வேலையாக இருந்தாலும், ஆசிரியர் பணிக்கு இடையூறு வரக் கூடாது; அதிலும் குறிப்பாக ஆசிரியர் பணியின் போது, பகுதி நேர வேலை குறுக்கே வரக் கூடாது என்றார் அவர்.
ஆசிரியப் பெருமக்கள், தங்களின் முதன்மைப் பணியான கற்றல் கற்பித்தலில் தான் முழு கவனமும் செலுத்த வேண்டும்.
நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் கடப்பாட்டுக்கு ஏற்ப, வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு கவனம் தேவை என்றார் அவர்.
எக்கச்சக்கமான ஆசிரியர்கள் தற்போது பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டு வருவது குறித்து கருத்துரைக்க கேட்ட போது, அமைச்சர் அவ்வாறு சொன்னார்.