Latestமலேசியா

16 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கு விவேகக் கைப்பேசி பயன்பாட்டை தடைச் செய்ய பரிசீலனை; பிரதமர் அன்வார் தகவல்

புத்ராஜெயா, அக்டோபர்-18,

பள்ளிகளில் அதிகரித்து வரும் பகடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, 16 வயதுக்கும் குறைவானவர்களுக்கு விவேகக் கைப்பேசி பயன்பாட்டை தடைச் செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் குழந்தைகளின் நடத்தை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சில சமயம் குற்றச்செயல்களுக்கும் வழிவகுக்கின்றன.

இதனைக் கையாளும் உடனடி நடவடிக்கைகளில் ஒன்றாக இளம் மாணவர்கள் விவேகக் கைப்பேசி பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் யோசனை ஆராயப்படுகிறது என்றார் அவர்.

இது குறித்து கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் விரைவில் விரிவான விளக்கத்துடன், பள்ளிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்துவார்.

இதனிடையே, பள்ளி நிர்வாகிகள் பள்ளியின் பெயர் கெட்டு விடக் கூடாது என்பதற்காக துன்புறுத்தல் சம்பவங்களை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.

சிறிய பிரச்சனைகள் புறக்கணிக்கப்படும் போது பெரிய பிரச்னைகளாக அவை மாறி விடும் என்றார் அவர்.

இவ்வேளையில், தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில், அரசாங்கம் சமூக ஊடகப் பயன்பாட்டின் குறைந்தபட்ச வயது வரம்பை 16-ராக உயர்த்தும் யோசனை பரிசீலிக்கப்படுவதாகக் கூறினார்.

இது MyKad, கடப்பிதழ் அல்லது MyDigital ID மூலம் பதிவுச் செய்யப்படலாம் என அவர் கோடி காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!