Latestஉலகம்

காஸா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தீர்வுக்கான மாநாடு நடத்தப்பட வேண்டும் – பாலஸ்தீன அதிபர் கோரிக்கை

காஸாவில் போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பாலஸ்தீன தாயகம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் அனைத்துலன அமைதி மாநாடு நடைபெற வேண்டுமன பாலஸ்தீன் அதிபர் மஹ்மூட் அப்பாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் நெருக்கடி பொதுவாகவே அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் உலக வல்லரசுகளின் உத்தரவாதத்தைத் கொண்ட அனைத்துலக மாநாடு நடைபெறவேண்டுமென ரமலாவிலுள்ள தமது அலுவலகத்திலிருந்து ராய்ட்டருக்கு வழங்கிய நேர்க்காணலில் மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்தார்.

காஸாவில் ஹமாஸ் தரப்பினருடனான போரில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அனைத்து இடங்களிலும் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியிருப்பதாக அவர் கூறினார். நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்திற்கு முடிவை காண்பதற்கு ஆயுத எதிர்ப்பை விட பேச்சுக்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தமது நிலையை பாலஸ்தீன் அதிபர் மீண்டும் மறுஉறுதிப்படுத்தினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!