Latestமலேசியா

உலு லங்காட்டில் திடீர் நீர் பெருக்கு; சிறார்கள் உட்பட 18 பேர் சிக்கித் தவிப்பு

அம்பாங், மே-12 – உலு லங்காட், சுங்கை லெப்போ ஆற்றில் கேளிக்கைக்காகச் சென்ற 7 சிறார்கள் உட்பட 18 பேர், திடீர் நீர் பெருக்கில் சிக்கியதால் பரபரப்பான தருணங்களை எதிர்கொண்டனர்.

நேற்று மாலை 5 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து, அம்பாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.

ஆற்றில் நீர் பெருக்கில் சிக்கிக் கொண்ட 3 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 7 சிறார்களை மீட்டு அவர்களைக் கரைக்குக் கொண்டு வந்தனர்.

எனினும் ஒரு பெண்ணுக்கு அதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மற்றபடி அசம்பாவிதம் எதுவும் இல்லை; மாலை 6.20 மணியளவில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!