Latestமலேசியா

காசா மருத்துவமனை மோசமான அழிவை கண்டுள்ளது உலக சுகாதார நிறுவனம் கண்டனம்

ஜெனிவா , டிசம்பர் 18 – காசாவின் வடக்கில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை மோசமான அழிவை சந்தித்துள்ளதோடு அங்கு எட்டு நோயாளிகள் இறந்துள்ளது குறித்து WHO எனப்படும் உலக சுகாதார நிறுவத்தினத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கடுமையாக சாடினார்.

இறந்த நோயாளிகளில் 9 வயது சிறுமியும் அடங்கும் என அவர் ‘X’ எக்ஸ்ஸில் பதிவிட்டுள்ளார். ஹமாஸின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாகப் அந்த மருத்துவமனை பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, பல நாட்கள் அம்மருத்துவமனைக்கு எதிராக தாக்குதல் நடத்திய பின் இஸ்ரேலிய இராணுவம் அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்து டெட்ரோஸ் அதானோம் அறிக்கை வெளியிட்டார்.

அந்த மருத்துவமனை தங்களது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறிய குற்றச்சாட்டையும் ஹமாஸ் தரப்பு மறுத்தது. பல நாட்களாக கமல் அத்வான் மருத்துவமனையை திட்டமிட்டு அழித்து , அந்த மருத்துவமனை செயல்படாமல் செய்து, குறைந்தது 8 நோயாளிகளுக்கு இஸ்ரேல் ராணுவம் மரணத்தை ஏற்படுத்தியது குறித்து உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைவதாக டெட்ரோஸ் அதானோம் பதிவிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பல சுகாதார ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதோடு, WHO மற்றும் இதர தொண்டூழிய அமைப்புகளின் பணியாளர்களின் நிலை குறித்த தகவல்களையும் தேடி வருவதாக அவர் கூறனார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!