Latestமலேசியா

மீண்டும் சம்பவம்; ஜோகூரில் RON 95 பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூர் ஓட்டுநர்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-9- ஜோகூரில் சிங்கப்பூர் வாகனமோட்டிகள் RON 95 பெட்ரோல் நிரப்பும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

கடந்த வாரம் தான் இஸ்கண்டார் புத்ரியில் சிங்கப்பூரைச் சேர்ந்த சொகுசு கார் RON 95 பெட்ரோலை நிரப்பிய சம்பவத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இப்போது அதே போன்ற சம்பவம், Senai – Desaru நெடுஞ்சாலையில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

சிங்கப்பூர் வாகனப் பதிவு எண் பட்டையைக் கொண்ட காருக்கு, ஓர் ஆடவர் RON 95 பெட்ரோலை நிரப்பும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

அது குறித்து விசாரணை தொடங்கியிருப்பதாக, உள்நாட்டு வாணிபம் – வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் ஜோகூர் கிளை கூறியது.

இதில் எண்ணெய் நிலையம் கவனக்குறைவாக இருந்தது உறுதிச் செய்யப்பட்டால், அதன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் KPDN கூறியது.

இவ்வேளையில், எண்ணெய் நிலையங்கள் மட்டுமின்றி, RON 95 பெட்ரோலை நிரப்பும் அந்நிய நாட்டு வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமென, ஜோகூர் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!