
குளுவாங், ஜன 15 – குளுவாங் மாவட்டத்தில் நான்கு பொழுது போக்கு மையங்களில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட பரிசோதனையில் வெளிநாடுகளைச் சேர்ந்ந்த 38 உபசரணைப் பெண்கள் உட்பட 6 துப்புரவு ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் 21 முதல் 48 வயதுடையவர்கள் என மலேசிய குடிநுழைவுத்துறையின் ஜொகூர் மாநில இயக்குனர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் ( Mohd Rusdi Mohd Darus ) தெரிவித்தார்.
வியட்னாமைச் சேர்ந்த 27 பெண்கள், இந்தோனேசியாவைச் சேர்ந்த 9 பெண்கள் மற்றும் தாய்லாந்தின் இரு பெண்களும் கைதானவர்களில் அடங்குவர்.
வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட Ops Gegar நடவடிக்கையின்போது 90 தனிப்பட்ட நபர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது .
அவர்களில் 38 உபசரணைப் பெண்களுடன் உள்நாட்டைச் சேர்ந்த துப்புபுரவு பணியாளர்களான ஆறு ஆண்களும் கைது செய்யப்பட்டதாக முகமட் ருஸ்டி கூறினார்.
மேலும் பொழுதுபோக்கு மையங்களை பராமரித்து வந்ததாக நம்பப்படும் 25 முதல் 41 வயதுடைய உள்நாட்டைச் சேர்ந்த ஐந்து ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.