Latestமலேசியா

கடன் தகராறில் ஜோகூர் பாரு உணவகத்தில் ஆயுதமேந்தி கலவரம்; 13 பேர் கைது

ஜோகூர் பாரு, டிசம்பர்-29,

ஜோகூர் பாரு, மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், 27 வயதுடைய இரு ஆடவர்கள், உலோக நாற்காலி மற்றும் இறைச்சி வெட்டும் கத்தியால் தாக்கப்பட்டனர்.

போலீஸார் விரைவாக நடவடிக்கை எடுத்து, 20 முதல் 40 வயதுடைய 12 ஆண்களையும், ஒரு வியட்நாமிய பெண்ணையும் கைதுச் செய்தனர்.

அவர்களில் 7 பேருக்கு பழையக் குற்றப் பதிவுகள் இருந்தன;

6 பேர் ‘கெத்தமின்’ போதைப்பொருள் உட்கொண்டது சிறுநீர் சோதனையில் கண்டறியப்பட்டது.

12 ஆடவர்கள் 7 நாட்களும், பெண் 3 நாட்களும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடன் தொடர்பான தனிப்பட்ட தகராறு காரணமாக அத்தாக்குதல் நடந்ததாக போலீஸார் கூறினர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தேடப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!