
ஜோகூர், பத்து பஹாட், டிசம்பர் 19 – மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய லாரி ஓட்டுனர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையையும் 10,000 ரிங்கிட் அபராதத்தையும் விதித்துள்ளது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 10 மாதங்கள் சிறை தண்டனையைச் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்றும், குற்றவாளியின் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்படும் என்றும் உத்தரவிடபட்டுள்ளது.
ஆனால் அந்நபர் குறிப்பிட்ட நேரத்திற்குள் விதிக்கப்பட்ட அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.
அந்நபரின் இரத்த பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டிய போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் அக்குற்றவாளி மதுபோதையில் இருந்ததும் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதென்று போலீசார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.



