Latestமலேசியா

மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக எடிட் செய்த மாணவர்கள் கைது; ராஜினாமா செய்தார் கூலாய் இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர்

கூலாய், ஏப்ரல்-19- வேண்டாத வேலையால் 2 மாணவர்கள் கைதாகியிருப்பதை அடுத்து, ஜோகூர், கூலாய், Foon Yew இடை நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பதவி விலகியுள்ளார்.

Gan Chuang Chee, ஏப்ரல் 12-ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக, பள்ளியின் இயக்குநர் வாரியம் கூறியது.

AI அதிநவீனத் தொழில்நுட்ப உதவியுடன் போலியாகப் பெண்களின் நிர்வாணப் படங்களை உருவாக்கி, அவற்றை இணையத்தில் விற்றதன் பேரில் அவ்விரு ஆண் மாணவர்களும் கைதாகி போலீஸ் விசாரணைக்கு ஆளாகியுள்ளனர்.

அவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய இயக்குநர் வாரியம், பள்ளி தலைமையாசிரியரின் ராஜினாமாவை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.

அவ்விவகாரம் குறித்து முன்னாள் மாணவர்கள் சங்கம் அளித்துள்ள புகாரை விசாரிக்க, 5 பேர் கொண்ட சுயேட்சை விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

எடிட் செய்யப்பட்ட தங்களின் புகைப்படங்கள் இணையத்தில் விற்கப்படுவதாக, அப்பள்ளி மாணவிகளும் முன்னாள் மாணவர்களும் இம்மாதத் தொடக்கத்தில் புகாரளித்த பிறகே அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து 16 வயது பையனும், 19 வயது இளைஞனும் கைதாகி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த 16 வயது மாணவன், சமூக ஊடகங்களிலிருந்து மாணவிகளின் புகைப்படங்களைத் திருடி, அவர்களின் முகங்களை AI உதவியுடன் நிர்வாணப் படங்களில் தத்ரூபமாக எடிட் செய்துள்ளான்.

பின்னர் தலா 2 ரிங்கிட்டுக்கு அவற்றை இணையத்தில் விற்று வந்துள்ளதும் அம்பலமாகியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!