Latestஉலகம்

தொடங்கியது ஆப்பரேஷன் சிந்தூர்; பாகிஸ்தானை அலற விட்ட இந்திய ஏவுகணைத் தாக்குதல்

லாகூர், மே-7-  26 பேரை பலிகொண்ட ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் 9 தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1 மணிக்கு அத்தாக்குதல் நடைபெற்றது.

இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

விமானங்களின் வான்வழி தாக்குதலை எதிர்பார்த்து எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்பைத் பலப்படுத்தியிருந்த நிலையில், அதுவே எதிர்பார்க்காத வகையில் இந்தியா ஏவுகணையால் தாக்கியது.

இதையடுத்து ‘நீதி நிலைநாட்டப்பட்டது’ என இந்திய இராணுவம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

“மிகவும் தெளிவாக திட்டமிட்டு சரியான திசையில் துல்லியமாக இத்தாக்குதலை நடத்தினோம். ஆனால் பாகிஸ்தானிய இராணுவ நிலைகளின் மீது எந்த ஒரு தாக்குதலையும் நாங்கள் நடத்தவில்லை. அனைத்துமே தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து தான்” என்றும் அது தெளிவுப்படுத்தியது.

எனினும் எத்தனை முகாம்கள் அழிக்கப்பட்டன, எத்தனைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்ற விவரங்கள் இன்று மாலையே அறிவிக்கப்படுமென இந்திய இராணுவம் கூறியது.

அத்தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடியும் அணுக்கமாகக் கண்காணித்துள்ளார்.

இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், இந்தியா தாக்கினால் வரட்டு கௌரவத்திற்காக அதை மறுத்து விடுவது இஸ்லாமாபாத்தின் வழக்கமாகும்.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவமும் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது.

எனினும் மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிச்சயம் இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று அமைதி காத்து புதன்கிழமை விடியற்காலையில் ஏவுகணை மூலம் காரியத்தை புது டெல்லி கச்சிதமாக முடித்துள்ளது.

இந்தியாவின் பதிலடியைக் கொண்டாடும் விதமாக #OperationSindoor #JaiHind #BharatMata
#IndiaPakistanWar என்ற _hashtag_களை உருவாக்கி இந்தியர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!