Latestமலேசியா

கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப்பை வழங்கும் விழா; ம.இ.கா மற்றும் எம்.இ.டியின் முதல் நிகழ்வு

கோலாலம்பூர், மார்ச் 8 – கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள 15 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு ம.இ.கா, எம்.ஐ.இடி எனும் மாஜீ கல்வி மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ எனும் நிகழ்ச்சியில் புத்தகப்பை வழங்கியது.

ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலோசனையில், எம்.ஐ.இடி கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று புத்தகப்பையை ம.இ.கா தேசிய அலுவகத்தில் டத்தோ ராஜா சைமன் தலைமையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

‘இந்திய மாணவர்களின் உயர் கல்வி பயில்வதற்கு எந்த தடையும் எதிர்நோக்கக் கூடாது என்ற இலக்குடன் செயல்டும் எம்.ஐ.இடி, தற்போது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் உதவ வேண்டும் என்னும் நோக்குடனும் பல திட்டங்களை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருகிறார்’ என கூட்டரசுப் பிரதேச ம.இ.கா தலைவர் டத்தோ ராஜா சைமன் சுட்டுக்காட்டினார்.

இந்நிலையில் புத்தகப்பையை பெற்றுக் கொண்ட மாணவர்களும் பெற்றோர்களும் தங்களின் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வணக்கம் மலேசியவிடம் பகிர்ந்து கொண்டனர்.

‘வரும் காலங்களில் இந்திய மாணவர்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்களை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ,எம்.ஐ.இடியின் வாயிலாக மேற்கொள்வார். எது எப்படியிருந்தாலும் நாட்டில் உள்ள இந்திய மாணவர்களுக்கு அரணாக ம.இ.காவும் எம்.ஐ.இடியும் விளங்கும்’ என்று டத்தோ ராஜா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!