Latestமலேசியா

நாட்டின் நன்மைக்காக டெஸ்லா, ஸ்டார்லிங்க் 100% விழுக்காடு வெளிநாட்டு உரிமைக்கு அனுமதி – பிரதமர் அன்வார் தகவல்

கோலாலம்பூர், நவ 1 – டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு 100 விழுக்காடு வெளிநாட்டு உரிமையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டார்லிங்க் விவகாரத்தில் உலகளாவிய நிறுவனக் கட்டமைப்பைக் கருத்தில் கொள்ள வேண்டியது மற்றும் மிகவும் பயனுள்ள முடிவெடுக்கும் செயல்முறையைக் கோருகின்றன. மேலும் மலேசிய இலக்கிவியல் உத்தரவாதங்கள் மற்றும் நாடுமுழுவதும் உள்ள ஸ்டார்லிங்க் சேவைகளின் பலன்களையும் பெற முடியும் என அன்வார் கூறினார்.

எந்தவொரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனமும் 100% விழுக்காடு பங்குகளை வைத்திருப்பதைத் தடுக்கும் வெளிநாட்டு உரிமை விதிகளில் டெஸ்லாவுக்கான விதிவிலக்கு புதிய திட்டங்கள், விரிவாக்கங்கள் மற்றும் உற்பத்தித் துறையில் முன்னுரிமை வழங்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் முன் அனுமதிக்கு ஏற்ப இருப்பதாக அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றத்தில் லாருட் பெரிக்காத்தான் நேசனல் உறுப்பினர் ஹம்ஸா ஸைனுடின் கேள்விக்கு பதில் அளித்தபோது அன்வார் இதனை தெரிவித்தார். இதனிடையே எலோன் மஸ்க்க்கிற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்நாட்டு சந்தையில் நுழைவதை அன்வார் வரவேற்றார், அவர்கள் கொண்டு வரும் தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் உற்பத்தி நன்மைகளை சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!