Latestமலேசியா

மக்களின் மறியல் வேலை செய்தது; தாமான் ஸ்ரீ மூடா திடீர் வெள்ளப் பிரச்னைக்கு விரைந்து தீர்வுக் காண அமிருடின் உத்தரவு

ஷா ஆலாம், ஏப்ரல்-21 , ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடா மக்களை அவதியுறச் செய்து வரும் திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வுக் காண, கட்டமைப்பு வசதிகளுக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Izham Hashim பணிக்கப்பட்டுள்ளார்.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

நேற்று அப்பகுதி வாழ் மக்கள் அமைதி மறியல் செய்ததோடு, பேரா, தாப்பா, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கே சென்று, அங்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமிருடினிடம் மகஜர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

திடீர் வெள்ளப் பிரச்னையால் தாமான் ஸ்ரீ மூடா மக்கள் படும் இன்னல்களை நானறிவேன்; எனவே நீண்ட கால திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

2021 பெருவெள்ளம் போல் மீண்டும் நிகழாதிருக்க, இதற்கு மத்திய அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் முக்கியமென அமிருடின் சொன்னார்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளில் Izham இறங்குவார்.

தொடக்கக் கட்டமாக ஷா ஆலாம் மாநகர மன்றம், வடிகால் நீர் பாசனத் துறை உள்ளிட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடத்தப்படும்.

வெள்ளத் தடுப்புத் திட்டம் தாமதமடைந்து வருவதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொன்னார்.

கடந்த வாரம் பெய்த அடைமழையின் போதும் தாமான் ஸ்ரீ மூடாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால், மக்கள் பொறுமையிழந்தனர்.

நேற்று காலை தாமான் ஸ்ரீ மூடாவில் மறியல் முடிந்த கையோடு, அங்குள்ள மக்களில் சிலர் பேருந்து மூலம் ஆயர் கூனிங் சென்று அமிருடினைச் சந்தித்தனர்.

திடீர் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியதோடு, மாநில அரசின் முழு விளக்கத்தையும் கோரியிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!