Latestஉலகம்

பூமியை தாக்க காத்திருக்கும் சூரிய புயல் ; இணையம், ஜி.பி.எஸ் சேவைகள் தடைப்படுமா?

அமெரிக்கா, நவம்பர் 11 – சோலார் ஸ்டார்ம் “Solar Storm” எனப்படும் சூரிய புயல் அடுத்தாண்டு வாக்கில், பூமியை தாக்குமென, அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வுக் கழகம் கணித்துள்ளது.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து மின்காந்தங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் ஏற்படுவதால் அந்நிகழ்வு சூரியப்புயல் என கூறப்படுகிறது.

எனினும், அது எப்பொழுது பூமியை தாக்கும் என்ற துல்லியமான நேரம் குறித்து சரியான தகவல் எதுவும் இல்லை.

சூரிய புயல் வலுப்பெறும்போது “பிரகாசமான ஒளி” தென்படுமென நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூரியனில், CME – Coronal Mass Ejection மற்றும் சோலார் பிலர்ஸ் ‘Solar Flares’ நிகழ்வுகளால் பூமியில் ஏற்படும் வளிமண்டல விளைவுகளாலேயே அதுபோன்ற சூரியப்புயல் ஏற்படுகிறது.

அதே போல, சூரிய காற்று பூமியின் காந்தப்புலம் அல்லது வளிமண்டலத்தில் நுழையும் போது அது வளிமண்டலத்தை வண்ணமயமாக ஒளிரச் செய்கிறது.

அந்நிகழ்வு வடக்கு அரைக்கோளத்தில் நிகழும் போது “Northern Lights” என்றும் தெற்கு அரைக் கோளத்தில் நிகழும் போது “Southern Lights” என்றும் அழைக்கப்படுகிறது.

அதனால், உலகின் பல பகுதிகளில் இணையம் மற்றும் ஜி.பி.எஸ் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புயலின் தாக்கத்தால், High Frequency எனும் உயர் ஆற்றல் ரேடியோ அலைகளும், அதன் இணைப்புகளும் பாதிக்கப்படலாம். மின்சார கட்டுமானங்களையும் அந்த புயல் பாதிக்கக்கூடுமென கூறப்படுகிறது.

எனினும், சூரிய புயல் பூமியை தாக்குவது ஒன்றும் புதிதல்ல. 1859-ஆம் ஆண்டு வாக்கில், அதுபோன்ற புயல் ஒன்று பூமியை தாக்கியுள்ளதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், சூரிய புயலின் தாக்கத்திலிருந்து, செயற்கை கோள்களையும், இணையம் – மின்னியல் சாதனங்களையும் பாதுகாக்கும் வழிவகைகள் குறித்து விஞ்ஞானிகள் துல்லியமாக ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக, Offline எனப்படும் “பயன்படுத்தாத நிலையில்” வைப்பதனால் அவற்றை பாதுகாக்க முடியுமென கூறப்படும் வேளை ; நீண்ட கால அடிப்படையிலான தீர்வுகளும் கண்டறியப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!