
கோலாலம்பூர், ஜூலை 31 – ‘கெத்தும்’ இலை போதை தண்ணீரை வைத்திருந்த குற்றத்தில் எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதற்கு ஆடவர் ஒருவரிடமிருந்து 12,000 ரிங்கிட் லஞ்ச பணத்தை பெற்ற 6 காவல்துறை அதிகாரிகளை பகாங் மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
கடந்த மே மாதம் தெமர்லோ மாவட்டத்தில் கெத்தும் தண்ணீரை வைத்திருந்த ஐந்து நபர்களை அந்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்களை மேல் விசாரணைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கும், வழக்கை போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யாமல் இருப்பதற்கும் குற்றவாளிகளிடமிருந்தே அந்த போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பகாங் MACC இயக்குநர் முகமட் ஷுகோர் மஹ்மூத் இந்த வழக்கை ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் பதிவுச் செய்து விசாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.