Latestமலேசியா

பள்ளிக்கு மட்டம் போடக் கூடாது, கொச்சை வார்த்தை பேசக் கூடாது ; அண்ணனின் உடன்படிக்கையில் தம்பி கையெழுத்து

கோலாலம்பூர், மார்ச் 14 – பள்ளிக்கு மட்டம் போடக்கூடாது. கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்ற உடன்படிக்கையில் முதலாம் படிவ மாணவர் ஒருவர் கையெழுத்திடும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

@insuranceagentadwin எனும் டிக் டொக் கணக்கில் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

குவாலா சிலாங்கூரை சேர்ந்த மாணவர் ஒருவரின் சகோதரர் அந்த உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

அம்மாணவரின் பெற்றோர் வேலை செய்யவில்லை. குடும்பத்தை வழிநடத்தும் மூத்த மகன் என்ற அடிப்படையில், தனது தம்பியை நல்வழிப்படுத்த அந்நபர் அந்த உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கியுள்ளார்.

அதற்காக, கையில் வைத்திருக்கும் வெள்ளை காகிதம் ஒன்றில், அம்மாணவர் செய்யக் கூடிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களை அவர் பட்டியல் இட்டிருந்த வேளை ; அதில் சம்பந்தப்பட்ட மாணவர் கையெழுத்திடும் காட்சிகள் வைரலான காணொளியில் இடம் பெற்றுள்ளது.

அந்த காணொளியை இணையப் பயனர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!