Latestமலேசியா

இந்தியச் சமூகத்துக்கான RM42 மில்லியன் மதிப்பில் புதிய முன்னெடுப்புகள் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், அக்டோபர்-17 – அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக RM42 மில்லியன் மதிப்பிலான புதியத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்களில் இலவச டியூஷன் வகுப்புகள், “Peranti Siswa” திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குதல், மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளும் அவற்றிலடங்கும்.

இவை அனைத்தும் இந்திய சமூகச் உருமாற்ற செயற்குழுவான மித்ரா வாயிலாக செயல்படுத்தப்படும் எனவும், சமூக நலனையும் கல்வி முன்னேற்றத்தையும் வலுப்படுத்துவதே அவற்றின் நோக்கமெனவும் அவர் கூறினார்.

எனவே, மடானி அரசாங்கம் இந்தியச் சமூகத்தைப் புறக்கணிப்பதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

பிரிக்‌ஃபீல்ட்ஸில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் சிறப்பு தேநீர் சந்திப்பில் பங்கேற்ற போது பிரதமர் அவ்விவரங்களைத் தெரிவித்தார்.

சுமார் 50 ஊடக அன்பர்கள், அச்சந்திப்பில் பங்கேற்று அன்வாருடன் கலந்துரையாடினர்.

தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனும் உடனிருந்தார்.

பின்னர், லிட்டில் இந்தியாவில் நடைப்பயணமாகச் சென்று, வியாபாரிகள் மற்றும் மக்களுடன் அன்வார் கலந்துரையாடினார்.

தீபாவளி ஏற்படுகள் குறித்தும் கேட்டறிந்த பிரதமர், ஒற்றுமை, நன்றி உணர்வு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட்டத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென வாழ்த்தினார்.

அதில் கோலாலம்பூர் மேயர் Dato’ Seri Maimunah Mohd Sharif உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

தீபாவளி சமயத்தில் பிரதமர் மக்களுடன் அளவளாவிச் செல்ல நேரடியாக பிரிக்ஃபில்ட்ஸ் வந்ததை அங்குள்ள வியாபரிகள் பலரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!