Latestமலேசியா

இன்டா வோட்டர் குழாயில் கசிவு; பினாங்கில் நிலம் உள்வாங்கியதற்கு காரணம் என நம்பப்படுகிறது

ஜோர்ஜ் டவுன் , அக் 16 – IWK  எனப்படும் இன்டா வோட்டர்  கன்சோர்டியம் ( Indah Water Konsortiuma) நிறுவனத்தின்  குழாய் கசிவுதான் இன்று பினாங்கு ,Pantai  Jerejak கில் உள்ள தாமன் ஸ்ரீ நிபோங்கில்    ( Taman Sri Nibong )   மண் அரிப்பு ஏற்பட்டு நிலம் உள்வாங்கியதற்கு  காரணம் என  என்று நம்பப்படுவதாக  பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்   Fahmi  Zainol   தெரிவித்திருக்கிறார்.  நிலத்தடியில் கசிந்த IWK குழாயின் காரணமாக, மணல் அரிப்பு ஏற்பட்டு, ஒரு சிறிய வட்டச் சந்தில்,  மணல் சரிந்து  துளை ஏற்பட்டது.  இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு முழுமையான பராமரிப்பு  பணிகளை indah Water Konsortium  மேற்கொள்ளும்.

 இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைவதற்கு ஒரு வாரமாகும் என  மதிப்பிடப்பட்டுள்ளது  என்று  இன்று  முகநூலில்   Fahmi  Zainol  பதிவிட்டுள்ளார்.   தாமன் ஸ்ரீ நிபோங்கிற்குச் செல்லும் பாதை ஒரு வாரத்திற்கு மூடப்பட்டதைத் தொடர்ந்து, அருகிலுள்ள சாலையைப் பயன்படுத்துவோர்  மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு முன்னதாக, அப்பகுதியில் உள்ள  பள்ளி பேருந்தின் டயர்  நிலம் உள்வாங்கிய பகுதியில்   சிக்கிக் கொண்ட  புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!