
ஷா ஆலாம், அக்டோபர் -15 ,
அண்மையில் 16 வயது பள்ளி மாணவி கொலையுண்ட சம்பவத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் 14 வயது மாணவனுக்கு மாணவியின் மீது ஏற்பட்ட பழிவாங்கும் உணர்ச்சியே காரணமென்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் மற்றும் மாணவி இடையே இதற்கு முன்னதாக எந்த வகையான தொடர்போ, உரையாடலோ, அல்லது உறவோ இல்லையென விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ சசாலி கஹார் (Datuk Shazeli Kahar) தெரிவித்தார்.
காலை 9.30 மணியளவில், மாணவி கழுத்து மற்றும் மார்பில் பல இடங்களில் குத்துக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவத்தின் போது ஏற்பட்ட அலறல் சத்தத்தை கேட்ட ஆசிரியர்கள் உடனே விரைந்து சென்று, சந்தேக நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபர் எதிர்கொண்ட மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி குழப்பத்தின் விளைவாக நடந்திருக்கலாம் என போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதுடன் சந்தேக நபர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.



