
கெய்ரோ, அக்டோபர்-14,
எகிப்து, கட்டார், துருக்கியே ஆகிய நாடுகள், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புடன் இணைந்து காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு எகிப்தில் Sharm El-Sheik உச்ச நிலை மாநாட்டில் நடைபெற்றது.
தான் முன்வைத்த அமைதித் திட்டம் ‘வெற்றியடைந்திருப்பதால்’ அகம் மகிழ்ந்த ட்ரம்ப், “மத்திய கிழக்கிற்கு இது ஒரு மகத்தான நாள்” என்றும், “சமாதானத்தின் புதிய தொடக்கம்” என்றும் வருணித்தார்.
இவ்வொப்பந்தத்தின் முதல் கட்டமாக, ஹமாஸ் போராளி கும்பல், மீதமுள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
அதேசமயம், இஸ்ரேலும் தன் படைகளை காசாவின் பெரும்பகுதியில் இருந்து திரும்பப் பெறுவதோடு, கைதி பரிமாற்றமும் நடைபெறுகிறது.
ஐநா மற்றும் பல உலகத் தலைவர்கள், இந்த ஒப்பந்தத்தை வரவேற்று நிலையான சமாதானம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாகக் கைவிடுமா? காசா நிர்வாகத்தில் இடம்பெறக் கூடாது என்ற நிபந்தனையை அது உண்மையிலேயே கடைப்பிடிக்குமா என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன.
எனவே, ஒப்பந்தம் கையெழுத்தானாலும், மனிதாபிமான உதவி, மறுசீரமைப்பு மற்றும் சமாதான கண்காணிப்பு தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.