Latestமலேசியா

கணக்கறிக்கை பரிசோதனைக்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அமைச்சின் கீழ் இருப்பது வழக்கமான நடைமுறைதான்; இது புதிது அல்ல – டாக்டர் ராமசாமி விளக்கம்

கோலாலம்பூர், ஜன 6 – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கூட்டரசு அரசாங்கத்தில் ஒரு அமைச்சு அல்லது ஒரு துறையின் கீழ் கணக்கறிக்கை பரிசோதனை மற்றும் அது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வைக்கப்பட்டிருப்பது வழக்கமான ஒன்றுதான் .

பொதுவாகவே சுதந்திரம் அடைந்தது பின்னர் கணக்கறிக்கை பரிசோதனைக்காக ஓர் அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இருப்பது புதிய விவகாரம் அல்ல என பினாங்கு முன்னாள் துணை முதல்வருமான பேராசியரியர் டாக்டர் ராமசாமி தெரிவித்தார். தாம் துணைமுதல்வராக இருந்தபோதுகூட கணக்கறிக்கை பரிசோதனைக்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மனித வள அமைச்சின் கீழ் இருந்து வந்ததுள்ளது.

இது ஒரு நிர்வாக நடைமுறைக்கான ஏற்பாடு.

மற்றபடி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக அதிகாரப் பணிகள் அனைத்தும் பினாங்கு அரசாங்கத்தின் பார்வையில்தான் இருக்கும் .

எனவே தற்போது பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய விவகாரம் என சொல்வதற்கு ஒன்றுமில்லை. பல ஆண்டுகளாக பினாங்கு இந்து அறவாரியத்தில் ஆணையராக இருந்துவரும் நாடாளுமன்ற உறுப்பிருமான ஆர் எஸ். என் ராயருக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும் என்றும் ராமசாமி இன்று வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

அதேசமயத்தில் அதன் நிர்வாக அதிகாரம் ஒற்றுமை அமைச்சின் கீழ் வந்துவிட்டது என புரிதல் கொள்ள வேண்டியதுமில்லை.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் முழுக்க முழுக்க அதற்கான சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஆனால் மித்ரா என்பது இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பிரிவு . எனவே மித்ராவுடன் பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுவிட்டது என்ற தவறான புரிதல் தேவையற்றது என ராமசாமி கூறினார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக அதிகாரம் அனைத்தும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் .

அதில் மாற்று கருத்து எதுவும் கிடையாது. எனவே ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் பினாங்கு அறப்பணி வாரியம் வைக்கப்பட்டதை வரவேற்கிறேன் என யாரும் சொல்வதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. இந்த வேளையில் சிறப்பு குழு என்ற அடிப்படையில் இயங்கிவரும் மித்ரா இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் இந்தியர்களின் எதிர்பார்ப்பு என டாக்டர் ராமசமி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!