
கோலாலம்பூர், டிச 10 – AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் மோசடி கண்டறிதல் அம்சத்தை Google அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்வழி பணம் கைமாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே மோசடியை கண்டறிய உதவும்.
வேலை மோசடி, போலி முதலீடுகள் மற்றும் அவசர பணம் செலுத்தும் தந்திரங்கள் ஆன்லைனில் வேகமாக அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் நோக்கத்தில் இந்த AI கருவி அமைந்துள்ளது என்று Google நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பயனர்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விரைவான, நிகழ்நேர சரிபார்ப்புகளைச் செய்ய அனுமதிக்கிறது.
டிசம்பர் 2 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கருவி, Circle to Search மற்றும் Google Lens பயன்பாடுகளில் நேரடியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
Circle to Search உங்கள் சாதனத்தின் திரையில் உள்ள எதையும் உடனடியாகப் பார்க்க பயனர்களை அனுமதிக்கிறது.
அதே நேரத்தில் Google Lens தகவல்களைப் பெற புகைப்படம் அல்லது screenshotடை scan செய்ய உங்களை அனுமதிக்கிறது.
சந்தேகத்திற்கிடமான செய்தி அறியப்பட்ட மோசடி வடிவங்களை ஒத்துப்போகிறதா என்பதைச் சரிபார்க்க இந்த அம்சம் பயனர்களுக்கு உடனடி வழியை வழங்குகிறது.
சந்தேகத்திற்குரிய ஒன்றை அது கண்டறிந்தால், சிவப்புக் கொடிகள், விளக்கங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அடுத்த படிகளுடன் AI கண்ணோட்டம் தோன்றும்.
இது இலவசம் என்பதோடு Android மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கிறது.
பொதுமக்களுக்கு விரைவான பாதுகாப்பு வசதியை வழங்குவதே இதன் குறிக்கோள் என்று Google தெரிவித்துள்ளது.



