அதிநவீனத் தொழில்நுட்பத்தின் ‘கெட்டப்’ பக்கம்; இந்தியாவில் AI chatbots வரவால் வேலையிழக்கும் call centre தொழிலாளர்கள்

புது டெல்லி, அக்டோபர்-17,
AI அதிநவீனத் தொழில்நுட்பத்தால் இந்தியாவில் call centre வாடிக்கையாளர் அழைப்பு மையங்கள் வேகமாக உருமாறி வருகின்றன — ஆனால் அதனால் அனைவருக்கும் நன்மை இல்லை…
காரணம் அந்த தெற்காசிய நாட்டில் ஆயிரக்கணக்கான call centre பணியாளர்களின் வேலைகள், தற்போது AI Chatbot-களின் ‘கைகளுக்கு’ மெல்ல மாறி வருகின்றன.
நிறுவனங்கள் தற்போது, மனிதர்கள் செய்யும் பணியைச் சுமார் 80 விழுக்காடு வரை குறைக்கும் திறன் கொண்ட AI கருவிகளை பயன்படுத்துவதாக, தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக LimeChat மற்றும் Haptik போன்ற புத்தம் புதிய நிறுவனங்கள், பல மொழிகளில் பேசக்கூடிய இந்த chatbot-களை உருவாக்கி, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் சேவை வழங்குகின்றன.
ஆனால் இதனால் வேலைபாதுகாப்பு குறைவு குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் துறை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பாக இருந்தது.
இதை கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை மறுபயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களின் மூலம் புதிய வகை வேலைகளுக்கு தயார்படுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
குறிப்பாக AI-யாலேயே செய்ய முடியாத வேலைகளுக்கு இளைஞர்களைத் தயார் படுத்த வேண்டும்.
அசுர வேகத்தில் சென்றாலும், மனிதர்களின் உணர்ச்சி, கருணை, சிந்தனைத் திறன் போன்ற அம்சங்களை இன்னும் AI மாற்ற முடியாது என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
AI மனிதர்களின் வேலைகளை முழுமையாக அழிக்கவில்லை… ஆனால் அவற்றின் இயல்பை மாற்றுகிறது. எதிர்காலத்தில், தொலைபேசியில் கேட்கும் மனித குரல் இயந்திரத்தின் குரலாக மாறும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.