
ஜோகூர் பாரு, அக்டோபர்-25 – ஜோகூர் பாரு, தாமான் அபாட் அருகே உள்ள கடை வீட்டில் ஒரு வெளிநாட்டு ஆடவர் 16 கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.
நேற்று முன்தினம் இரவு 7 மணி வாக்கில் அது குறித்து பொது மக்கள் தகவல் கொடுத்ததாக, ஜோகூர் பாரு செலாத்தான் (JBS) மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிடெண்டன்ட் Lim Jit Huey தெரிவித்தார்.
தரையில் இறந்து கிடந்தவர், 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
கொலையாளி மற்றும் கொலைக்குப் பயான்படுத்தப்பட்ட ஆயுதத்தை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
தகவல் தெரிந்த பொது மக்கள் JBS போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.