
கோலாலம்பூர், ஜனவரி-23, தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 176 வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததை அடுத்து நேற்றிரவு 7.15 மணி வாக்கில் ஜாலான் அலோரில் சோதனை நடைபெற்றதாக, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Saupee Wan Yusoff கூறினார்.
குடிநுழைவுத் துறையின் 61 அதிகாரிகளும், கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லின் 30 அமுலாக்க அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.
கைதானதாவர்களில் 71 வங்காளதேசிகள், 60 மியன்மார் நாட்டவர், 24 இந்தோனீசியர்கள், 16 நேப்பாளிகள், 3 பாகிஸ்தானிகளும் அடங்குவர்.
மேல் நடவடிக்கைக்காக, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை தலைமையகத்திற்கு அவர்கள் கொண்டுச் செல்லப்பட்டனர்.
முறையான பயணப் பத்திரம் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக தங்கியிருந்தது போன்ற காரணங்களுக்காக அவர்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.