
குளுவாங், மே 7- சிம்பாங் ரெங்காம் சாலையோர ஓய்வெடுக்கும் பகுதியில் (R&R), வியாபாரி ஒருவரிடம், தலா 1200 ரிங்கிட்டைக் கொள்ளையடித்தச் சம்பவத்தில் மூவர் கைதாகியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வெவ்வேறு இடத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதில் 19 முதல் 23 வயதுடைய அம்மூவரும், ஜோகூர் பாருவுக்குத் தப்பிச் செல்லும் வழியில் போலீசாரிடம் வசமாக சிக்கியதாக குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், பஹ்ரின் முகமட் நோஹ் (Bahrin Mohd Noh) கூறினார்.
மேலும் முதல்கட்ட விசாரணையில், அம்மூவருக்கும், கடந்த கால குற்றப்பதிவுகள் இருப்பதும், சீறுநீர் பரிசோதனையில் போதைபொருள் கலந்திருப்பதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் மே 11 வரை 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.