
அமெரிக்கா, ஜனவரி 14 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், Michigan- இல் உள்ள Ford தொழிற்சாலையை பார்வையிட்ட போது, Jeffrey Epstein விவகாரம் குறித்து விமர்சித்த ஒரு ஊழியரிடம் அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தி நடுவிரல் சைகை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதன் உண்மைத்தன்மையை வெள்ளை மாளிகை மறுக்கவில்லை.
அதே நேரத்தில், பல Ford ஊழியர்கள் டிரம்பை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகளை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



