
கோலாலம்பூர், ஜன 31 – சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (Dato’ Seri Amirudin Shari) எதிர்வரும் பிப்ரவரி 3ஆம்தேதி திங்கட்கிழமை பத்துமலை ஆலயத்திற்கு வருகை புரியவிருக்கிறார்.
அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் அமிருடின் ஷாரி பத்துமலைக்கு வருகை புரிவார் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தனத்தின் தலைவர் டான்ஸ்ரீ R. நடராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 11 ஆம்தேதி பத்துமலை திருத்தலத்தில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் சிலாங்கூர் மந்திரிபுசார் பத்துமலை ஆலயத்திற்கு மேற்கொள்ளும் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சுற்றுப்பயணிகளை ஈர்க்கக்கூடிய முக்கிய மையாகவும் பத்துமலை திருத்தலம் இருப்பதால் தைப்பூசத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் உட்பட பல்வேறு நடடிக்கைகள் குறித்து சிலாங்கூர் மந்திரிபுசார் நேரடியாக பார்வையிடுவார் என்பதோடு டான்ஸ்ரீ நடராஜா மற்றும் தேவஸ்தான பொறுப்பாளர்களிடம் விளக்கங்களை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.