
கோலாலம்பூர், ஜன 20 – அடுத்த ஆண்டு தொடங்கி பாலர் பள்ளி
வகுப்பு 5வயதில் தொடங்கும் அதே வேளையில் முதல் வகுப்பு ஆறு வயதில் தொடங்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
ஆனால் மாற்றங்கள் பெற்றோருக்கு இன்னும் கட்டாயமில்லை என்றும், புதிய கல்விச் சூழலுக்கு, குறிப்பாக கல்வியாளர்கள் தயாராகுவதற்கு இடம் அளிக்க வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இன்று நடைபெற்ற தேசிய கல்வித் திட்டம் 2026-2035 வெளியீட்டு விழாவில் உரையாற்றியிபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.



