Latestமலேசியா

கடற்படை பயிற்சி வீரர் மரணம்; அறுவருக்கு 18 ஆண்டு சிறை

புத்ரா ஜெயா, பிப் 28 – 8 ஆண்டுகளுக்கு முன் கடற்படை பயிற்சி வீரர் சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைனுக்கு ( Zulfarhan Osman Zulkarnain) நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றத்திற்காக தேசிய தற்காப்பு
பல்கலைக்கழகத்தின் ஆறு முன்னாள் மாணவர்களுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

அறுவருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிப்பதில் அரசு தரப்பு தவறிவிட்டதாக மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹசிம் தலைமையிலான மூன்று அமர்வு நீதிபதிகள் குழுவினர் தீர்ப்பளித்தனர்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான கொலைக் குற்றத்தை நாங்கள் தள்ளுபடி செய்த போதிலும் அவர்கள் நோக்கமில்லா மரணம் விளைவித்தனர் என்பதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக நீதிபதி ஹஸ்னா தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கை செவிமடுத்த மேலும் இரு நீதிபதிகளில் நோர்டின் ஹசான் மற்றும் அப்துல் கரிம் அப்துல் ஜாலில் ஆகியோரும் அடங்குவர்.

Zulfarhan னை கொலை செய்ததாக குற்றவாளி என மேல் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்யவேண்டும் என Akmal Zuhairi Azmal, Azamuddin Sofi, Najib Razi, Afif Najmudin Azahat, Shobirin Sabri , Hakeem Ali ஆகியோர் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மலேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் ஜெபாட் தங்கும் விடுதியில் Zulfarhan னை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு எதிரான கொலைக் குற்றத்தை உயர்நீதிமன்றம் நோக்கமில்லா மரணமாக குறைத்து கடந்த 2021ஆம் ஆண்டு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

எனினும் அந்த அறுவரும் கொலைக் குற்றத்தை புரிந்துள்ளனர் என சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிருபித்துள்ளதாக கடந்த ஆண்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!