Latestமலேசியா

Festival Mega iLINDUNGu 2025; நாடளாவிய நிலையிலான PERKESO-வின் தொடர் மக்கள் சந்திப்புகள்

ஷா ஆலாம், அக்டோபர்-24,

ஷா ஆலாம் மக்களே, குடும்பத்துடன் கலந்துகொள்ள உங்களுக்கோர் அருமையான வாய்ப்பு!

‘Festival Mega iLINDUNGu 2025’ எனப்படும் 3-நாள் பெருவிழா சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வால் இன்று அக்டோபர் 24 முதல் 26 வரை, டத்தாரான் கார்னிவல், ஸ்டேடியம் ஷா ஆலாம் வளாகத்தில் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன…

பிரபல உள்ளூர் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகள், இலவச சுகாதார பரிசோதனைகள், உடல் ஆரோக்கியம் குறித்த உரைகள் மற்றும் பயனுள்ள தகவல்களும் அவற்றிலடங்கும்.

அதோடு, RM10,000 ரிங்கிட் வரையிலான ஊதியத்துடன் கூடிய சுமார் 1,000 வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் ஆலோசனைகள், குடும்ப பொழுதுபோக்கு அங்கங்கள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற விளையாட்டுகளும் உள்ளன.

டேப்லட், சைக்கிள், Gamin விவேகக் கை ககடிகாரம் என மொத்தமாக RM20,000 ரிங்கிட் மதிப்பிலான பரிசுகள், குலுக்குச் சீட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து வசதிக்காக Glenmarie LRT நிலையத்திலிருந்து இலவச பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது.

எனவே, உங்கள் குடும்பத்துடன் வந்து இந்த Mega iLINDUNGu 2025 விழாவில் கலந்து மகிழுங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!