Latestமலேசியா

வெற்றியடைந்த 24 மணி நேர இடைவிடா நேரலை; மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-18 – மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக,
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட 24 மணி நேர நேரலை வெற்றிகரமாக நிறைவுப் பெற்றுள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய அந்த YouTube நேரலை, எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறும் இல்லாமல் நேற்று காலை சரியாக 8 மணிக்கு முடிவுக்கு வந்தது.

ஏய்ம்ஸ்டின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டோக் பக்கங்களிலும் அது ஒளிபரப்பானது.

24 Hours of Excellence எனும் அந்த நேரலை, கல்வி-ஆராய்ச்சிப் பணிகள், சமூகத்துடனான தொடர்பு ஆகியவற்றில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 24 ஆண்டு கால சாதனைகளைக் கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

அனைத்துத் தளங்களிலும் தேசிய மற்றும் அனைத்துலக நேயர்கள் என மொத்தமாக 110,000-க்கும் மேற்பட்டோர் நேரலையை கண்டு களித்தனர்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் அனைத்துதக் கல்வி புலங்களையும் சேர்ந்த 97 பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பேச்சாளர்கள் அதில் பங்கேற்றனர்.

நிறைவு விழாவில், மலேசிய சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள், இந்த 24 மணி நேர இடைவிடா நேரலை சாதனைக்கான அங்கீகாரச் சான்றிதழை ஏய்ம்ஸ்ட் நிர்வாகத்திடம் வழங்கினர்.

வணக்கம் மலேசியா உள்ளிட்ட 5 தகவல் ஊடகங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டன.

அனைத்துலகத் தரத்திலான வசதிகளுடன் குறைந்தக் கட்டணத்தில் நிறைவான உயர் கல்வியை வழங்கி வரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை, மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இது அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!