
கோலாலம்பூர், ஜூலை 31 – இன்று, கோலாலம்பூர் ஜாலான் புடூவில் போலீசார்கள் மேற்கொண்ட சோதனையின் போது காவல்துறை பணியாளர் ஒருவர் ஆடவன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த காவல் பணியாளர் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் (RCJ) ஈடுபட்டிருந்த போது சந்தேக நபர் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் லாவகமாக தப்பி ஓடினாலும் பின்பு, சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சந்தேக நபர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அந்தக் காவலர் மேல் சிகிச்சைக்காக செராஸ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் கைதான அந்த ஆடவன் மேல் கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.