
கோலாலாம்பூர், நவம்பர்-27 – கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெற்ற 2025 HRD விருதளிப்பு விழாவில் மலேசியாவின் மனித மூலதன வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நிறுவனங்கள், பயிற்சி வழங்குநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மனிதவள அமைச்சான KESUMA ஆதரவுடன் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp ஏற்பாடு செய்த இவ்விழா, மொத்தம் 40 விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கியது.
தொழிலாளர்கள், பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், பயிற்சியாளர்கள், Icon முன்மாதிரிகள் மற்றும் சிறப்பு அங்கீகாரம் உள்ளிட்டவை அவ்விருதுகளில் அடங்கும்.
இவ்வாண்டு, நிகழ்ச்சி வரலாற்றில் அதிகபட்சமாக 770 விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் புதியச் சாதனையாகும்.
தலைமைத் தாங்கி விழாவை சிறப்பித்த மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ Azman Mohd Yusof, ”நாம் எவ்வளவு மேம்பட்ட தொழில்நுட்பம் அல்லது உட்கட்டமைப்பு உடையவர்களாக இருந்தாலும், கடைசியில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது என்னவோ மக்களின் திறன், படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாடே” என வலியுறுத்தினார்…
HRD Corp-பின் தலைமை செயலதிகாரியான Dr. Syed Alwi Mohamed Sultan, இவ்விருதுகள் திறமையை மேம்படுத்தி, புத்தாக்கத்தை ஊக்குவித்து, நாட்டின் தொழிலாளர் தரத்தை உயர்த்துவதில் மிக முக்கிய பங்காற்றும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை கௌரவிப்பதாகக் கூறினார்…
“இந்த பயணம், மலேசியர்களுக்கு அர்த்தமுள்ள கற்றல் வாய்ப்புகளை உருவாக்கி, வேகமாக மாறி வரும் சூழலில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தயார்படுத்துகிறது” என்றார் அவர்.
மொத்ததில், உலகத் தரம் வாய்ந்த திறமையாளர்களை உருவாக்கும் மற்றும் நாட்டின் மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்தும் மலேசியாவின் கடப்பாட்டை இந்த 2025 HRD விருதுகள் பறைசாற்றின.



