
சைபர்ஜெயா, ஜூன்-26 – சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது தங்கும் விடுதி அறையில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த 20 வயது அந்த இளம் பெண், உடல் முழுக்க இரத்கக் காயங்களுடன் அறையில் கிடந்ததை செவ்வாய்கிழமைக் காலை அவரின் தோழி பார்த்து பதறிபோனார்.
பின்னர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக, நெருங்கிய வட்டாரங்கள் கூறின.
Physiotherapy எனப்படும்
உடல் இயக்க சிகிச்சைத் துறையில் இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் அம்மாணவி, இதர 5 தோழிகளுடன் ஒரே அறையில் தங்கி வந்துள்ளார்.
எனினும், தோழிகள் ஐவரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குத் திரும்பி விட்டனர்; தேர்வுக்குத் தயாராகி வருவதால் இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அம்மாணவியின் மடிக்கணினி உள்ளிட்ட சில முக்கிய உடைமைகள் காணாமல் போயிருப்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல ஏதுவாக, அம்மாணவியின் உடலை அவரின் தங்கும் விடுதியிலிருந்து போலீஸார் வெளியே கொண்டு வரும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இவ்வேளையில் அம்மாணவியின் மரணம் ஒரு கொலையே என்பதை செப்பாங் போலீஸ் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.
கொலையாளிக்கு எதிரான தேடுதல் வேட்டைத் தொடங்கியிருப்பதாக, மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.