
அம்பாங், மே-2, அம்பாங், ஜாலான் கெர்ஜா ஆயிர் லாமாவில் உள்ள அம்பாங் ஜெயா உணவங்காடி நிலையத்தை, நேற்று மாலை காரொன்று தடம்புரண்டு மோதியது.
அங்கு மாற்றுத் திறனாளிகளுக்கான கார் நிறுத்துமிடத்தில் நுழையும் போது, காரோட்டியான ஆடவர் தவறுதலாக எண்ணெய் பெடலை அழுத்தி விட்டார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் உணவங்காடி நிலையத்தில் மோதியதாக, அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
நல்லவேளையாக யாருக்கும் அதில் காயமேற்படவில்லை.
காருக்கும், உணவங்காடி தளவாடங்களுக்கு மட்டுமே சேதாரங்கள் ஏற்பட்டன