
கோலாலம்பூர், ஜனவரி-24, தலைநகரில் இரமலான் சந்தைகளில் கடைகளைப் போடுவதற்கான உரிம விண்ணப்பங்கள் மற்றும் சந்தை பராமரிப்புப் பணிகளை இவ்வாண்டு தொடங்கி கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லே முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துகொள்ளும்.
நியாயமான விலையில் கடைகள் வாடகைக்கு விடப்படுவதையும், சிறந்த முறையில் அவை நிர்வகிப்படுவதை உறுதிச் செய்யவும் ஏதுவாக அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா அதனைத் தெரிவித்தார்.
இரமலான் சந்தை வாடகைத் தொடர்பில் எழுந்த புகார்களை கையாளும் விதமாக அந்நடவடிக்கை அமைகிறது.
DBKL-லின் நிர்வாகத்தின் கீழ் இரமலான் சந்தைக் கடைகளுக்கு தலா 500 ரிங்கிட் மட்டுமே வாடகையாக விதிக்கப்படும்.
அதாவது ஒரு நாளைக்கு 16 ரிங்கிட் மட்டுமே.
முந்தைய ஆண்டுகளில், இரமலான் சந்தைகளைக் குத்தகைக்கு விட்டதில், சில வியாபாரிகள் 20,000 ரிங்கிட் வரை செலவு செய்தும் அவர்களுக்கு கடைகள் கிடைக்காமல் போனதாக புகார்கள் வந்ததை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இரமலான் சந்தைகள் ஒழுங்குமுறையோடு செயல்படுவதை உறுதிச் செய்ய, பெரு நிறுவனங்களுடனும் DBKL ஒத்துழைக்குமென்றும் Dr சாலிஹா கூறினார்.