Latestமலேசியா

மலேசிய பேட்மிண்டன் ஜோடி, ஆங்கில பேட்டியின் போது தடுமாற்றம்; கேலி செய்த வலைத்தளவாசிகள் மீது கண்டனம்

கோலாலம்பூர், டிச 13 – அண்மையில் இந்தியாவில் Guwahati மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் சூங் ஹான் ஜியான் – ஹாய்கால் நஸ்ரி ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றியாளர் பட்டத்தை வென்றனர்.

அப்போது இந்திய தொலைக்காட்சி நிருபர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு தடுமாற்றத்தினால் உடனடியாக பதில் சொல்லாமல் தடுமாறிய அவர்களின் ஒரு நிமிடம் 14 வினாடிகள் கொண்ட காணொளியை சிலர் இணையத்தில் கேலி செய்து வைரலாக்கி வருது அதிகப்பட்ச கண்டனத்தைப் பெற்றுள்ளது.

ஆங்கிலம் ஒரு முக்கியமான மொழியாக இருந்தாலும், எல்லோரும் அதை சரளமாக பேசுவதில்லை.

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி போன்ற பல வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் அல்லது சீனா மற்றும் ஜப்பானின் சிறந்த பேட்மிண்டன் வீரர்கள் ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பதில்லை. ஆனாலும், யாரும் அதை பெரிதுப்படுத்துவதில்லை.

ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாமல் போனதற்காக மலேசிய விளையாட்டாளர்களை கேலி செய்வது இது முதல் முறையல்ல. 2017 ஆம் ஆண்டில் பினாங்கின் முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் ஃபைஸ் சுப்ரி அற்புதமான கோலை அடித்தற்காக சூரிச்சில் FIFAவின் புஸ்காஸ் விருதை பெற்றுக்கொண்டார்.

அவரது அந்த அதிசய கோலை கொண்டாடுவதற்கு பதிலாக விருதளிப்புக்குப் பின் ஃபைஸ் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை குறித்து விமர்சகர்கள் குறை கூறினர்.

இது போன்ற விவகாரங்களில் நாம் சற்று விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நமது விளையாட்டு வீரர்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை நாம் மதிக்கவும் மற்றும் பாராட்டவும் வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!