Latestமலேசியா

மித்ராவுக்கு ஆலோசனை நிறுவனமாக நியமிக்கப்பட்ட பெமாண்டுவுக்கு 5 லட்சம் ரிங்கிட் வழக்கப்பட்டதா -? ராயர் – கணபதி ராவ் சாராமரியாக கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 23 – மித்ராவுக்கு தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்பட்டிருக்கும்போது தற்போது அது வழங்கும் உதவி தொகைகள் குறித்து ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்குவதற்கு பெமாண்டு என்ற அமைப்பு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இப்படியொரு ஆலோசனை அமைப்பு அவசியம் தேவையா என Jelutong DAP நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘R.S.N Rayer’ மற்றும் ‘DAP Klang’ நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் ஆகியோர் ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ‘Aaron Ago Dagang’-கிடம் கேள்விக் கணைகளை தொடுத்தனர்.

அதோடு பெமாண்டுவிற்கு மித்ராவிடமிருந்து 5 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையா என்றும் ராயர் வினவினார் .

மித்ராவின் நிதி சரியான தரப்பினருக்கு சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு ‘PEMADU’ ஆலோசகராக நியமிக்கப்பட்டதாக தெரிவித்த ‘Aaron’, அந்த ஆய்வுக்காக மித்ராவிடமிருந்து 5 லட்சம் ரிங்கிட் பெற்றதாக கூறப்படுவதை மறுத்தார்.

ஆனால் ஆய்வு மற்றும் கலந்துரையாடல் நடத்துவதற்காக அரசாங்கத்திடமிருந்து ‘PEMANDU’ சேவைக் கட்டணம் பெற்றதாக அவர் கூறினார்.

ஆய்வு மற்றும் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக 500,000 ரிங்கிட்டிற்கும் குறைவாக ‘PEMANDU’ கேட்டதாகவும் இது அவர்களது சேவைக்கான கட்டணமே தவிர மித்ராவின் ஒதுக்கீடு அல்ல என ‘Aaron’ கூறினார்.

மித்ராவின் செயல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பத்து எம்.பி பிரபாகரனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைவராக நியமித்துள்ளதோடு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது எதற்காக ‘PEMANDU’ நியமிக்கப்பட வேண்டும் என கணபதி ராவ் கேள்வி எழுப்பினார்.

மித்ராவின் செயல்பாடு குறித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை அறிந்து கொள்வதற்குத்தான் ‘PEMANDU’ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் 20 மற்றும் 22 ஆம் தேதிக்கிடையே ‘PEMANDU’ நடத்தவிருக்கும் கலந்துரையாடலில் அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளலாம்.

இந்திய சமூகத்திற்கு என்ன வேண்டும் என்பதை இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கும்படி கூறிய ஏரன், மித்ரா விவகாரத்தில் ‘PEMANDU’ ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லையென இந்திய சமூகம் கருதினால் அந்த கருத்தை கலந்துரயாடலில் தெரிவிக்கும்படி வலியுறுத்தினார்.

அப்போது அமைச்சரை இடைமறித்த கணபதிராவ் இப்படியொரு சந்திப்பு நடைபெறவிருப்பது குறித்து தாம் உட்பட 10 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் மித்ரா வைக்கப்பட்டு அதனை கண்காணிப்பதற்கு பிரபாகரனை நியமிக்கப்பட்டு இந்த ஆண்டில் நான்கு மாதங்கள் நெருங்கவிருக்கும் வேளையில் அதன் உதவிகள் எதுவும் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதையும் கணபதி ராவ் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!