
மஸ்ஜிட் இந்தியா, மார்ச் 27 – மலேசியப் பிரதமர், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வியாழக்கிழமை சொன்னதுபோல கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் கட்டப்படவுள்ள ஜேக்கல் நிறுவனத்தின் மடானி பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டு விழாவை தொடக்கி வைத்தார்.
ஜாக்கெல் ட்ரேடிங் (Sdn Bhd) நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்படுகிறது. இது அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இது அமைகிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த ஆலய விவகாரத்தில் எட்டப்பட்டிருக்கும் தீர்வு அகந்தையால் அல்ல, மாறாக இஸ்லாத்தின் அறிவு, வலிமை மற்றும் மகத்துவத்தினால். ஆகவே, இஸ்லாமியர்கள், நல்லிணக்கம், பரிவு மற்றும் நீதி ஆகிய பண்புகளை வெளிப்படுத்தி, நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அன்வார் ஹரி ராயா பெருநாளுக்கான உதவித் தொகையை ஆதரவற்றோர், தனித்துவாழும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தேவைப்படும் அனைத்து தரப்பினருக்கும் வழங்கினார்.
இன்றைய நிகழ்ச்சியில் துணைப்பிரதமர் Datuk Seri Fadhillah Yusuf, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr Zaliha Mustafa, சமய விவகார அமைச்சர் Datuk Na’im Mokhtar, தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil , ஜேக்கெல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர், டத்தோ ஸ்ரீ முகமட் பாரோஸ் முகமட் ஜாக்கெலும் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த பள்ளிவாசல் 24 மாதத்திற்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனிடையே, அங்கு தற்போது வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் நில விவகாரம் சர்ச்சையாகி நாடு தளுவிய நிலையில் பெரும் விவாதத்திற்குள்ளாகி பின்னர் அது சுமூகமாக தீர்க்கப்பட்டது.
ஆலய நிர்வாகம், தற்போதிருக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில், 4,000 சதுர அடி இடத்திற்கு, மாறுவதற்கு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.